சினிமா

தியேட்டரில் பெண் மரணம்!.. அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் அவரை பேன் இண்டியா நடிகராக இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது. இதையடுத்த புஷ்பா 2 படத்தையும் உருவாக்கினார்கள். இந்த இரண்டு படங்ளையும் சுகமார் இயக்கியிருந்தார்.

புஷ்பா 2 வெளியான போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வந்திருந்தார். அப்போது கூட்டம் அலைமோதியதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். அவரின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்த்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் காலை அவர் ஜாமினில் விடுதலையானார்.

இந்நிலையில் வருகிற 22ம் தேதி அல்லு அர்ஜுன் இந்த வழக்கு தொடர்பாக நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்