இலங்கை

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு பணிகளை இன்றைய தினம் நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் பார்வையிட நீதிமன்று அனுமதித்து இருந்து.

அந்நிலையில் புதைகுழியை பார்வையிட வரும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் , புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்