சொல்லாமலே, பூ, டிஷ்யூம், பிச்சைக்காரன், சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட சில முக்கிய திரைப்படங்களை இயக்கிய சசி இயக்கத்தில் சுவாசிகா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்து நேற்று வெளியான திரைப்படம் நூறு சாமி. சிறு வயதிலேயே தனது கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.. அதற்கு அவரின் மகன்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அம்மாவின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்கள் சம்மதித்தாலும் கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை..
நூறு சாமி திரைப்படம் பெண்களை அழ வைத்திருக்கிறது. பெண்களின் உணர்வுகளை அழகாக பல காட்சிகளிலும் பிரதிபலித்திருக்கிறது. அதேநேரம் எல்லா ஆண்களையும் கவரவில்லை. படம் பார்த்த பலரும் ‘படம் சீரியல் போல இருக்கிறது. எல்லா காட்சிகளிலும் கதாநாயகி அழுது கொண்டே இருக்கிறார். படம் இரண்டு மணி நேரம் 10 நிமிடம் ஓடுகிறது.. அதில் இரண்டு மணி நேரம் அழுது கொண்டே இருக்கிறார்கள்.. விஜய் ஆண்டனியை ஹீரோ போல போஸ்டர் போஸ்டரில் போட்டுள்ளனர். ஆனால் படத்தில் அவர் 10 நிமிடம் மட்டுமே வருகிறார்’ என்று பலரும் புலம்பி வருகிறார்கள்..
ஒரு பக்கம் நூறு சாமி திரைப்படம் நேற்று தமிழகத்தில் ரூ.75 லட்சம் வசூல் செய்திருக்கிறது, படத்திற்கு வரும் விமர்சனங்களை பொறுத்து நூறு சாமி படத்தின் வசூல் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

