சினிமா

ஜெயிலர் 2 படத்தோடு மோதுகிறா ஓம்?!.. தனுஷ் எடுத்த அந்த முடிவு!…

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகும் போது அவரை விட சிறிய நடிகரின் படமும் அதே தேதியில் வெளியானால் அந்த பெரிய நடிகரின் ரசிகர்கள் அந்த சின்ன நடிகரை சமூக வலைதளங்களில் மோசமாக திட்டுவார்கள். அதோடு அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களையும் பரப்புவார்கள்.

இதற்கு முன் விஜயின் படங்கள் வெளியாகும் போது வெளியான அஜித் உள்ளிட்ட சில படங்கள் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கிறது. எனவேதான் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சின்ன நடிகரின் படங்களை ரிலீஸ் செய்ய மாட்டார்கள்.. அதையும் மீறி சில நேரம் ரிலீஸ் தேதி அதுவாக அமைந்துவிடும். ஆனால் சுதாரித்துக் கொண்டு ரிலீஸ் செய்தியை மாற்றி விடுவார்கள்.

சூர்யாவின் கங்குவா திரைப்படம் கூட ரஜினியின் வேட்டையின் படத்தோட மோதவிருந்ததால் ரிலீஸ் செய்தியை தள்ளி வைத்தார் சூர்யா. தற்போது அதே முடிவைத்தான் நடிகர் தனுஷ் எடுத்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படம் வருகிற அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

ஆனால் தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படமும் அதே தேதியில் வெளியாவதாக கேள்விப்பட்ட தனுஷ் ஓம் படத்தின் ரிலீஸ் செய்தியை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது தீபாவளியை குறிக்க வைத்து தனுஷின் ஓம் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்