மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் திரிஷா. லேசா லேசா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அதன்பின் தொடர்ந்து பல வருடங்கள் பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் மட்டுமின்றி நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே நம்பர் ஒன் இடத்தை யார் பிடிப்பது என்பதில் போட்டி இருந்தது. ஆனால் நயன்தாராவுக்குதான் அந்த இடம் கிடைத்தது. இடையில் சில வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் ஹிட்டுக்கு பின் மீண்டும் நிறைய படங்களில் நடிக்க தொடங்கினார்..
குறிப்பாக விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். ஒருபக்கம் அவரைப் பற்றிய சர்ச்சைகளும் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால் அவர் எதற்கும் இப்போது வரை விளக்கம் கொடுப்பதில்லை.
சமீபத்தில் குஷ்புவின் மகள் அவந்திகா திருமணத்திற்காக கோவா சென்றார். இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை திரிஷாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

