செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. ரசிகர்களை கவர்ந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில்தான் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ஜுலை 3ம் தேதியான இன்று காலை தமிழகமெங்கும் வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் தொடர்பாக விஷ்ணு விஷால் கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் பேட்டி கொடுத்தார்..
நேற்று இரவு சில முக்கிய ஊடகவியலாளர்களுக்கும், சினிமா பத்திரிக்கையாளர்களுக்கும் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த பலருமே படம் நன்றாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள். கண்டிப்பாக விஷ்ணு விஷாலுக்கு இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமையும் எனும் பலரும் சொல்லி வருகிறார்கள்.
படத்தின் கதை, திரைக்கதை படத்தில் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற கருணாஸின் காமெடி காட்சிகள், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அவர்களின் மகளாக வரும் சிறுமியின் நடிப்பு என எல்லாமே சிறப்பாக இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். எனவே, கட்டா குஸ்தி ஒரு வெற்றிப்படமாக அமையும் என கணிக்கப்படுகிறது.

