டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதேபோல் சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பல மடங்கு இறக்குமதி வரியை விதித்தார்.. ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவரின் தலையில் கொட்டியதால் வரியை குறைத்தார்.
அதேபோல், ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி இஸ்ரேலுடன் சேர்ந்த இந்த நாட்டின் மீது போரை துவங்கினார். ஆனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் வரும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடி அமெரிக்காவுக்கு செக் வைத்தது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் செல்வது தடுக்கப்பட்டு எரிபொருள் விலை உயர்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அமைதி ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், ட்ரம்புக்கு பரிசாக கிடைத்த ஒரு வைர மோதிரம் அவருக்கு பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. பெல்ஜியம் வைர நிறுவனம் ஒன்று கைக்கடிகாரம் அளவுள்ள ஒரு தங்க மோதிரத்தை அமெரிக்க ட்ரம்புக்கு சமீபத்தில் பரிசாக கொடுத்தது. உலக வைர மையத்தின் தலைவர் இசிடோர் மோர்செல் பெல்ஜியத்திற்கான அமெரிக்க தூதரிடம் இந்த மோதிரத்தை வழங்கினார்.
300க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் பதித்த இந்த மோதிரத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.33 லட்சம் என சொல்லப்படுகிறது. ஆனால் பரிசுகளை ஏற்றுக் கொள்வதை தவிர்க்கும் வெள்ளை மாளிகையின் மரபை டொனால்ட் டிரம்ப் மீறி விட்டதாக எதிர்க்கட்சியினர் அங்கே போர்க்கொடி தூக்கிருகிறார்கள்.

