சினிமா

ரூ.1.80 கோடி மோசடி!.. நடிகர் ஆர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு!..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஆர்யா. கடத்த ஜூன் 25ம் தேதி அவரின் நடிப்பில் அனந்தன் காடு என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஒருவராக ஆர்யாவும் இருந்தார்.

இந்நிலையில்தான் ஆர்யா மீது ஹைதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனந்தன் காடு தயாரிப்பாளர் வினோத் மற்றும் ஆர்யாவின் உதவியாளர் கிஷோர் மீது ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025ம் வருடம் தாஹோர் சினி டெக்னிக் நிறுவனத்திடம் அனந்தன் காடு படப்பிடிப்புக்கான அதிக நவீன உபகரணங்களை ரூ.2.12 கோடிக்கு வாடகைக்கு எடுத்த நிலையில் அதில் 1.80 கோடி தரவில்லை என புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மீதிப் பணத்தை கேட்க சென்ற தாஹோர் டெக்னிக் கணக்காளர் ஜாவித் அலியை மிரட்டியதாகவும் மூவர் மீதும் வழக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் வெளியான அனந்தன் காடு திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்