தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலைய்ல், வெற்றிமாறன் கையில் இருக்கும் அடுத்தடுத்து 5 திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்..
தற்போது சிம்புவை வைத்து அரசன் என்கிற படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தை கலைப்புலி தானு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஒருபக்கம் கென் கருணாஸ் மற்றும் அமீரை வைத்து ராஜன் வகையறா என்கிற படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த வருட இறுதிக்குள் இந்த படம் முடிவடையும் என சொல்லப்படுகிறது. அடுத்து விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கும் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
மீண்டும் தனுஷை வைத்து தமிழ் திருமுகன் என்கிற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தை தனுஷே தயாரிக்கவுள்ளார்.
இதில் சூர்யாவின் வாடிவாசல் படம் இல்லை என்பதால் அந்த படம் கிட்டத்தட்ட டிராப் என்றே கணிக்கப்படுகிறது.

