இந்தியா

காமராஜர் ஆட்சிக்கு பின் விஜய் ஆட்சியில் தான் லஞ்சம் இல்லை: ப சிதம்பரம்

மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சியை பாராட்டி பேசியுள்ளார்.

காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதேபோன்று தற்போதைய தவெக அரசின் இரண்டு மாத கால ஆட்சியில், பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளதாக பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முறையான நிர்வாக நடவடிக்கைகள் மூலம் அரசுத் துறைகளில் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்பதற்கு இந்த இரண்டு மாத கால செயல்பாடுகள் சான்றாக இருப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்