இந்தியா

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

விடுமுறையில் இருந்தபோது தனது பணி மின்னஞ்சலின் தானியங்கி பதில் மூலம் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை அறிந்த 31 வயதுடைய இளைஞரின் செயல் இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது.

விடுமுறையில் இருந்த அவருக்கு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் குறித்த செய்தி வந்துள்ளது. பணியாளர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரை தொடர்புகொள்ள விரும்புவோர் அவரது மேலாளரை அணுகுமாறும் அவரது பணி மின்னஞ்சலில் தானாகவே மாறியிருந்தது.

விடுமுறைக்கு செல்வதற்கு முன்னதாக, ஜனவரி மாதம் தான் பதவி உயர்வு பெற்றதாகவும், மேலாளருடன் சென்ற வாரம் மதிய உணவு அருந்தியபோது கூட எவ்வித மாற்றமும் தெரியவில்லை என்றும் அவர் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். பணிநீக்கம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்காத நிலையில், அவர் ரெடிட் தளத்தில் ஆலோசனை கேட்டுள்ளார்.

இதை கண்ட இணையவாசிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், மின்னஞ்சல் மற்றும் பிற தகவல்தொடர்புகளை ஆவணப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளனர். விடுமுறை நாட்களை சிதைக்க வேண்டாம் என்றும், பணியில் மீண்டும் சேர்ந்த பிறகு இதை கையாளுமாறும் பலர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த தகவலை ஊழியர்களுக்கு தெரிவிக்கும் விதம் தொழில்முறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற விவாதத்தை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்