சினிமா

ராமின் ஏழு கடல் ஏழு மலை ரிலீஸ் தேதி அறிவிப்பு

கற்றது தமிழ் , தங்க மீன்கள் , பேரன்பு மற்றும் பறந்து போ போன்ற அற்புத படங்களை கொடுத்த இயக்குநர் ராம் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி நாயகனாக நடிக்க, அவருடன் அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சூரி இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாநாடு வெற்றிப்படத்தை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். வழக்கம்போல யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ், டீஸர் மற்றும் யுவன் இசையில் வெளியான ஏழேழு மலை , மறுபடி நீ ஆகிய இரண்டு பாடல்களும் இசைப்பிரியர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகின. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பல வெளிநாட்டு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம், தற்போது வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய ஸ்பெஷல் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்