விளையாட்டு

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்….

நடந்து முடிந்த உலக கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் மோதியது. அதில் 1-0 என்கிற புள்ளியில் ஸ்பெயின் கோல் அடித்து அர்ஜென்டினாவை தோற்கடித்தது. தற்போது ஸ்பெயின் உலக சாம்பியனாக மாறியிருக்கிறது..

அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே பலரும் கால்பந்து போட்டிகளை பார்ப்பதுண்டு. எப்படியும் மெஸ்ஸி கோல் அடித்து அர்ஜென்டினா நாட்டை வெற்றி பெற வைத்து விடுவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இது அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது..

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மெஸ்ஸி ‘வலி மிகவும் அதிகமாக இருக்கிறது.. இந்த காயத்தை ஆற்றுவது எனக்கு கடினமாக இருக்கும்.. ஆனால் நல்ல விஷயங்கள் அனைத்தையும் நான் நினைவில் கொள்வேன்.. நாங்கள் ஆடியோ போட்டிகள் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும்.. நாட்டின் முழு ஆதரவும் அணியின் உழைப்பும் முயற்சியும் சேர்ந்து எங்களை மீண்டும் உலகில் சிறந்த அணிகளில் ஒன்றாக நிலை நிறுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு வாழ்த்துக்கும், ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் மனமார்ந்த நன்றிகள்.. சாம்பியன் பட்டம் பெற்ற ஸ்பெயினுக்கு எனது வாழ்த்துக்கள்’ என கூறியிருக்கிறார். மேலும் நமது அணி தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளது. அர்ஜென்டியனாக பெருமை கொள்கிறேன்.. எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்