இந்தியா

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!…

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சமீபத்தில் கோவில்பட்டி திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது முதலமைச்சர் விஜய் பற்றி மிகவும் அவதூறாகவும், மரியாதை குறைவாகவும் பேசினார். முதல்வர் விஜயை ஒருமையில் விமர்சித்த அவர் ‘நீ சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகளை உடைத்து விடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து இவர் மீது புகாரளிக்கப்பட்டு அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலயில், மார்க்கண்டேயன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டனர்.

அதன்பின் மீண்டும் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்களுக்கு அவரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் சிறையில் அடைப்பதற்காக அவரை போலீசார் கூட்டி சென்ற போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன் ‘சிறை சவுகரியமாக இருக்கிறது.. நீங்கள் நினைக்கும் அளவிற்கு இல்லை.. மீண்டும் ஜாமீன் மனு போட வேண்டிய அவசியம் இல்லை.. எவ்வளவு துன்பப்படுகிறோமோ அவ்வளவு விரைவாக ஆட்சிக்கு வருவோம்’ என அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்