சினிமா

அமெரிக்காவில் தெருக்கூத்து பாடி அசத்திய நடிகர் திலகம்!.. வைரல் வீடியோ!…

பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை அவ்வர் நிரூபித்தார். அதற்கு காரணம் சிறுவயதிலிருந்து நாடகங்கள் நடித்து பயிற்சி எடுத்துக் கொண்டவர்தான் நடிகர் திலகம்.

அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக சிவாஜி கணேசன் மாறினார். அப்போது அதிகமான ரசிகர்களை பெற்றிருந்த எம்.ஜி.ஆரின் போட்டி நடிகரக சிவாஜி கணேசன் வலம் வந்தார். ஆக்சன் படங்களில் எம்ஜிஆர் நடித்த போது, சிவாஜியோ நல்ல கதைக்களம் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளை கொண்ட குடும்ப கதைகளில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் சிவாஜி.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்றோரின் விருப்பப்படி தனது மாமன் மகள் கமலாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நான்கு குழந்தைகள் இதில் ராம்குமார், பிரபு இருவருமே சினிமா துறைக்கு வந்தார்கள். கடந்த 2001ம் வருடம் ஜூலை 21ம் தேதி சிவாஜி கணேசன் மறைந்தார்.

இந்நிலையில் 1987ம் வருடம் தனது மனைவியுடன் சிவாஜி கணேசன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்காக சிறுவயதில் நாடகங்களில் பாடிய தெருக்கூத்து பாடலை மூச்சிவிடாமல் சிவாஜி கணேசன் பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்