கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கே அவரை காண பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு விஜய்தான் முழு பொறுப்பு என திமுகவும், இதற்கு அரசியல் சதிதான் காரணம் என தவெகவ்வும் தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு கரூர் சென்ற முதல்வர் விஜய் கரூர் சம்பவத்தில் இறந்து போன குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அரசு பணிக்கான உத்தரவை வழங்கினார்..
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். அதில் ஏற்கனவே அரசு தரப்பில் 10 லட்சம் மற்றும் தவெக சார்பில் 20 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையிலும் அரசு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.. தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் அரசு வேலை இல்லாமல் இருக்கும்போது இது தேவையில்லாதது என மனுவில் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘ கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி கொடுத்தால் சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் அரசு பணி கொடுக்க வேண்டும் என கேட்பார்கள்.. சாலை விபத்தில் அரசு பேருந்து உயிரிழந்த குடும்பத்திற்கும் இதுபோல அரசு பணிகள் கொடுக்கப்படுமா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முடிவில் படித்த பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்து வரிசையில் காத்துக் கிடக்கும் போது இவர்களுக்கு அர்சௌ வேலைவாய்ப்பு கொடுப்பதை ஏற்க முடியாது எனக்கூறி 31 குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கப்பட்டதை நீதிபதிகள் ரத்து செய்தனர்.. இது தவெகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே, நாளை உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவிருக்கிறது.

