இந்தியா

டாஸ்மாக்கில் இனிமே ரூ.10 எக்ஸ்ட்ரா வாங்கமாட்டோம்!.. சங்க மாநில தலைவர் பேட்டி…

தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.

கடந்த 5 வருட திமுக ஆட்சியிலும் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் இருக்கும் நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் விக்னேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும், இது தொடர்பாக சில டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட நீக்கமும் செய்யப்பட்டனர்.

ஒருபக்கம் நகர்புறத்தில் உள்ள 2500 டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்,

செய்தியாளர்களை சந்தித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனி பாரதி ‘டாஸ்மாக் கடைகளில் இனி MRP-யை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்க கூடாது என்ற அரசின் அறிவுறுத்தலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். மாநில முழுவதும் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும் MRP விலைக்கே மது விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம்’ என கூறியிருக்கிறார்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்