இந்தியா

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுவது போல் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவரின் மகன் ஆங்கிலத்தில் சில நிமிடங்கள் பேசினார். அவர் பேசிய ஸ்டைலை விஜய் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்தார்கள்..

ஒருபக்கம், கடந்த வாரம் வெளியான பரிதாபங்கள் நிகழ்ச்சியில் சுதாகர் மார்க்கண்டேயனின் மகனைப் போலவே பேசி நக்கலடித்திருந்தார். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, பரிதாபங்கள் டீமை கடிமையாக திட்டி வருகிறார்கள். திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தங்களின் சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள பரிதாபங்கள் சேனல் ‘ஆடி மாச பாவங்கள் வீடியோவில் இடம் பெற்ற ஒரு காட்சி சிலரின் மனதை புண்படுத்தியதாக அறிகிறோம். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.. ஆனாலும் சிலரின் மனதை காயப்படுத்தி இருப்பதால் அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது. பரிதாபங்களின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்