தெலுங்கில் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக மாறியிருப்பவர் ஸ்ரீலீலா. பாலையா நடித்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீலீலா நடித்த வேடத்தில்தான் தமிழில் மமிதா பைஜூ நடித்திருந்தார்.
தெலுங்கில் முன்னணி இளம் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கியுள்ள ஸ்ரீலீலா அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் நடித்த பராசக்தி படத்தில் நடித்திருந்தார். அதேபோல், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஓம் படத்திலும் ஸ்ரீலீலா நடித்திருக்கிறார்.
இந்நிலையில்தான், ரஜினியின் புதிய படத்தில் ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. அதேநேரம் அது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்மன் படத்திலா அல்லது நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணையும் படத்திலா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

