தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே பின்பற்றப்பட்டு வரும் பல கிரீன்ச் சீன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தமிழ் படம். இந்த படத்தை சி.எஸ் அமுதன் இயக்க மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் முதல் பாகம் 2010ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பல வெற்றி படங்களில் இடம் பெற்ற பல காட்சிகளை இந்த படத்தில் நக்கல் அடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2018ம் வருடம் வெளியானது. இந்த படத்திலும் மிர்ச்சி சிவாவே கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி 8 வருடங்களாகிவிட்ட நிலையில் தற்போது மூன்றாம் பாகம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
விரைவில் ஷூட்டிங் தொடங்க போவதாக சொல்லப்படுகிறது. இந்த 8 வருடங்களில் கேஜிஎப், புஷ்பா உள்ளிட்ட பேன் இந்தியா படங்கள், புராண கதைகள், லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ், நெல்சனின் டார்க் காமெடி என பல விஷயங்கள் நடந்திருப்பதால் அது அனைத்தையும் வைத்து இந்த படத்தில் நக்கல் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

