இந்தியா

செயற்கை பன்னீருக்கு தடை!.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி..

உலகமெங்கும் உள்ள மக்களால் தண்ணீர் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக பன்னீர் இருக்கிறது. பாலாடைக்கட்டியில் தயாரிக்கப்படும் இந்த உணவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் பன்னீரை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

சப்பாத்தி, நான், ரொட்டி போன்ற உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக இதை அவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள். பன்னீர் பட்டர் மசாலா என்பது பலருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. இந்நிலையில்தான், மகாராஷ்டிராவில் பாலுக்கு பதிலாக தாவர எண்ணெய் மற்றும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்படும் அனலாக் பன்னீர் எனப்படும் செயற்கை பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

உணவகங்கள் மற்றும் கேட்டரிங் அமைப்புகள் இந்த செயற்கை பன்னீரை உண்மையான பன்னீர் எனக்கு கூறி சமையல்களில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டிருக்கிறது. உணவு பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் 35 சதவீதத்திற்கும் அதிகமான மாதிரிகள் தரம் குறைந்தவை என்பது தெரியவர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்