நடிகர் சங்க தேர்தலில் விஷால், கார்த்தி, நாசர் குழு வெற்றி பெற்றதுமே நாங்கள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்போம்.. அந்த கட்டிடத்தில்தான் எனது திருமணம் நடக்கும் என விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த பல வருடங்களாகவே அதற்கான வேலைகள் நடந்து வந்தது., தற்போது நடிகர் சங்க பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விஷாலிடம் நடிகர் சங்கம் கட்டிடம் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஷால் ‘கட்டிட பணிகள் முடிந்துவிட்டது. யார் யாரோ நடிகர் சங்க கட்டத்தை திறந்து வைக்க போகிறார்கள் என்று பார்த்தோம்.. ஆனால் எங்கள் நண்பர் ஜோசப் விஜய்தான் 100 ஆண்டுகள் இருக்கப் போகிற கட்டிடத்தை திறக்கப் போகிறார்’ என கூறியிருக்கிறார். இதையடுத்து நடிகர் சங்க கட்டிடத்தை முதல்வர் ஜோசப் விஜய் திறந்த வைப்பது உறுதியாகியிருக்கிறது.

