சினிமா

யஷஸ்வியுடன் காதலா? மிருணாள் தாகூர் கொடுத்த பதில்!

பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கஃபே ஒன்றில் மிருணாள் தாகூர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் காணப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் மிருணாள் கஃபேவில் இருந்த நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு யஷஸ்வி அங்கிருந்து வெளியேறியதாக தெரிந்தது.

இதையடுத்து, இருவரும் ஒரே இடத்தில் இருந்ததை வைத்து அவர்கள் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிடத் தொடங்கினர். இதனால் மிருணாள் தாகூர் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் காதல் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது.

இந்த வதந்தி தொடர்ந்து பேசுபொருளான நிலையில், மிருணாள் தாகூர் அதற்கு தற்போது நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

வதந்தி தொடர்பான பதிவுக்கு பதிலளித்த மிருணாள், “ப்ரோ, கொஞ்சம் ரிலாக்ஸ். நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை எங்கே பார்த்தீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், படித்தவர்கள்கூட இதுபோன்ற தகவல்களை எந்தவித ஆதாரமும் இல்லாமல் நம்புவது ஆச்சரியமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, நாட்டில் விவாதிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் இருக்கும்போது, அவற்றில் கவனம் செலுத்தலாம் என்றும் மிருணாள் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்