இந்தியா

எம்.எல்.ஏக்களுக்கு கார்!. செலவுக்கு ஒரு லட்சம்!.. முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!

தமிழகத்தின் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பல நிர்வாகிகள் முதல் முறையாக இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாக மாறியிருக்கிறார்கள். அதில் சிலர் அமைச்சர்களாக மாறியிருக்கிறார்கள்.

சமீபத்தில் சட்டசபையில் பேசிய ஒரு தவெக எம்.எல்.ஏ தான் மிகவும் எளிய குடும்பத்தில் இருந்து வந்ததாகவும் தொகுதிக்கு சென்று வருவதற்கு தனக்கு ஒரு கார் இல்லை எனவும், உதவியாளர் வைத்துக் கொள்ளவும் தனக்கு வசதி இல்லை எனவும், தன்னைப்போல் பல எம்.எல்.ஏக்களின் நிலை இருப்பதாகவும், முதல்வர் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தொகுதி முழுவதும் சென்று வர அரசு சார்பில் கார் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். அதோடு மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகன படியாக வழங்கப்படும் எனவும், எம்.எல்.ஏக்கள் அலுவலக பணியாளர்களை நியமித்துக்கொள்ள தனியாக ரூ.25 ஆயிரம் படி கொடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். இதன் மூலம் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் இல்லாமல், ஒரு கார் மற்றும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்