சினிமா

தவெகவில் சேர்ந்து அண்ணன் விஜய்கூட பயணிப்பேன்!

சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து கோலிவுட்டில் முக்கிய நடிகராக மாறினார். அஜித், விஜய் இருவருமே முக்கிய நடிகர்கள் என்றாலும் அவர்கள் இருவருடன் நன்றாக பழக்கக் கூடியவர் சிம்பு. அஜித் தனக்கு பிடித்த நடிகர் என பல பேட்டிகளிலும் சொன்னவர் சிம்பு.

ஒருபக்கம் விஜய் நடித்த வாரிசு படத்தில் ஒரு பாடலை பாடி கொடுத்ததோடு அந்த பாடலின் புரமோஷன் வீடியோவில் நடனமும் ஆடியிருந்தார். இந்நிலையில், பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் புதிய அலுவகத்தை இன்று சிம்பு திறந்துவைத்தார். அப்போது ‘அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா?’ என சவுக்கு சங்கர் சிம்புவிடம் கேட்டார்.

அதற்கு பதில் சொன்ன சிம்பு ‘ஏன்?. அதான் அண்ணன் விஜய் நல்லா ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்காரே’ என்றார். அதற்கு ‘எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கா?’ என சவுக்கு சங்கர் கேட்டதற்கு ‘எதிர்காலத்தில் அப்படி ஒரு ஆசை வந்தால் அண்ணன் விஜயுடன் இணைந்து பயணித்து அவருக்கு ஆதரவாக இருப்பேன்’ என கூறியிருக்கிறார்.

தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான வேலைகளை செய்து வருகிறார் என செய்திகள் வெளிவந்தநிலையில், அவரின் போட்டி நடிகரான சிம்பு விஜயுடன் சேர்ந்து பயணிப்பேன் என சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்