சினிமா

ஐட்டம் பாட்டுக்கு மட்டும் என்னை கூப்பிடுறாங்க!.. தமன்னா வேதனை!..

மும்பையிலிருந்து தமிழ சினிமாவுக்கு வந்த நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு என இளம் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். அதில், பாகுபலி முக்கியமான படமாக அமைந்தது.

ஒருபக்கம் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தனுஷ் நடமாடியிருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு அந்த பாடலும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தமன்னா ‘சவால் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், ஐட்டம் பாடல்களுக்கு ஆட மாட்டுமே என்னை கூப்பிடுகிறார்கள். ஒரு கவர்ச்சியான பிம்பத்தை தாண்டி ஒரு நடிகையாக என்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளும் வகையிலான கதாபாத்திரங்களை இயக்குனர்கள் எனக்கு தர வேண்டும்.

காலத்திற்கேற்ப சினிமா மாறி வருகிறது. கதையின் தேவையில் முத்தக் காட்சிகள் இருந்ததால் அதை தனிப்படுத்திப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்