உலகம்

கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம்!.. மைட்ரோசாப்ட் சி.இ.ஓ அதிரடி பேட்டி!…

சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவு(AI) மக்களிடம் பிரபலமாகி வருகிறது. AI-ஐ பயன்படுத்தி இல்லாததை இருப்பது போல காட்ட முடியும்.. மனதில் கற்பனை செய்து பார்ப்பதை கூட திரையில் வீடியோவாக கொண்டு வர முடியும்.. அப்படித்தான் தற்போது பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் மென்பொருள் துறையில் AI வளர்ச்சியை கண்டு வருகிறது. Software Coding-ஐ மனிதர்களை விட AI வேகமாக எழுதி விடுகிறது. இதனால் வரும் காலத்தில் Sofrtware துறையில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AI வளர்ச்சி காலத்திற்கு தேவையான ஒன்று.. அதை மறுக்க முடியாது என்றாலும் இதன் வளர்ச்சியால் மனிதர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. AI மனித குலத்திற்கு எதிரானது.. AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புண்டு என பலரும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா ‘மனிதகுலத்திற்கு உதவாத மனித கட்டுப்பாட்டில் இல்லாத AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது வீண் வேலை. Super Inteligence போன்று AI மாடல்கள் மனிதர்களின் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.. அதன் வளர்ச்சி வேகத்தை குறைக்க வலியுறுத்திய பிற நிறுவனங்களின் அழைப்பை நான் வரவேற்கிறேன்.

Microsoft AI மாடல்களுக்கான புதிய நடத்தை விதிகளை நாளை மக்களின் கருத்துக்காக வெளியிடவிருக்கிறோம். அதேபோல், AI -யின் பயன்கள் சில நிறுவனங்களின் கைகளில் மட்டும் முடங்காமல் அனைத்து நாடுகளுக்கும் பரவலாக சென்றடைய வேண்டும்’ என அவர் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த