விளையாட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சியை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் லெவனில் இருந்து நீக்கிய அணி நிர்வாகத்தின் முடிவை, முன்னாள் இந்திய அணியின் தலைவரும் தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்மாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடரில் ‘தொடர் நாயகன்’ விருது வென்றிருந்தபோதிலும், சஞ்சு சம்சனுக்காக அவர் கழட்டிவிடப்பட்டது தவறான முன்னுதாரணம் என்று ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தமது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், சூர்யவன்சி நீக்கப்பட்டது குறித்து தன் மனைவியும் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டார். துலீப் டிராபி, ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரருக்கு இது போன்ற தொடர் மாற்றங்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், சஞ்சு சம்சனுக்கும் சரியான தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படாமல் தவிக்கப்படுவதாக அவர் தன் ஆதங்கத்தை பதிவு செய்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்