இந்தியா

யூபிஐ பரிவர்த்தனைகள்.. யாருக்கெல்லாம் கட்டணம் உண்டு.. யாருக்கெல்லாம் கட்டணம் இல்லை.. முழு விவரங்கள்..

இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகள் எப்போதும் போல இலவசமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண நுகர்வோர் இடையே நடக்கும் நபர்-சார்ந்த பணப் பரிமாற்றங்களுக்கு எத்தகைய கட்டணமும் வசூலிக்கப்படாது.

தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் இந்த இலவச சேவை தடையின்றி நீடிக்கும். அதேபோல், சிறிய வியாபாரிகளுக்கான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.2,000-க்கு உட்பட்ட வியாபாரக் கட்டணங்களுக்கும் கட்டணம் கிடையாது. இதன் மூலம் சுமார் 96 சதவீத வியாபாரப் பரிவர்த்தனைகள் எந்தவித பாதிப்பும் இன்றி முற்றிலும் இலவசமாகவே இருக்கும்.

குறிப்பிட்ட வரம்பான ரூ.2,000-க்கு மேற்பட்ட சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே எம்டிஆர் கட்டணம் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த எம்டிஆர் கட்டணம் என்பது அரசாங்கத்திற்கோ அல்லது என்பிசிஐ -க்கோ செல்லும் வரி அல்ல; மாறாக, வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்பில் இயங்குபவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் தொகையாகும்.

யுபிஐ கட்டமைப்பின் தடையற்ற வளர்ச்சிக்கும், நீண்ட கால நிலைத்தன்மைக்கும் இந்த நடைமுறை அவசியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தனிநபர்களும் சிறு வியாபாரிகளும் கூடுதல் சுமைக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்