சினிமா

திருமணமாகி மாமியார் வீட்டுக்கு வாழ போகும் மணமகன்.. இயக்குனர் இளன் நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ்..

இயக்குநர் இளன் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற இளன், இந்தப் படத்தின் மூலம் இயக்கத்துடன் நடிப்பிலும் களமிறங்கியுள்ளார்.

இப்படத்தில் சான்வி மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இளங்கோ குமரவேல், ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘அட்ராசிட்டி’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது முழுப் படமும் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

திரையரங்க வெளியீட்டை தவிர்த்து, நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தை காண முடியும்.

திருமணத்துக்குப் பிறகு மனைவியின் வீட்டில் வசிக்கச் செல்லும் கதாநாயகன், அங்கு மாமியார், மாமனார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் சந்திக்கும் சிக்கல்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவையான சம்பவங்களையும் மையமாக கொண்டு கதை நகர்கிறது. திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள், குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றை கலகலப்பான பாணியில் சொல்ல முயன்றுள்ளது இப்படம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்