சினிமா

இளையராஜா குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!.. தலைப்பே வேறலெவல்..

தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இவரின் குடும்பத்திலிருந்து ஏற்கனவே கங்கை அமரன், அவரின் மகன் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி போன்றவர்கள் திரைத்துறைக்கு வந்தனர்.

தற்போது அவரக்ளின் குடும்பத்திலிருந்து தற்போது மேலும் ஒரு நடிகர் வந்திருக்கிறார். ஆம் இளையராஜாவின் மூத்த சகோதரர் ஆர்.டி பாஸ்கரின் இளைய மகன் ஜெயன் சினிமாவில் நடித்திருக்கிறார். இந்த படத்தை குடும்பஸ்தன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் எம் சுப்பிரமணியன் இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் கதையை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மேலும், இந்த படத்திற்கு ‘ராஜாவின் பிளேலிஸ்ட்’ என தலைப்பு வைத்திருக்கிறார்களாம். இந்த படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குனர் சுதா கொங்கரா பணிபுரிவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்