குட் பேட் அக்லி படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார் என செய்திகள் வெளியானது. ஆதிக்கும் அதை உறுதி செய்தார். ஆனால், ஒரு வருடமாகியும் அந்த படம் துவங்கப்படாமல் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டார்.
அஜித்துக்கு அவ்வளவு சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. எனவே, தானே இந்த படத்தை தயாரிப்பது என்கிற முடிவுக்கு அஜித் வந்துவிட்டார். இந்த படத்திற்கு டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் நடிப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே நடிகை ஸ்ரீலீலாவிடம் படக்குழு பேசியிருந்தது. அவரும் நடிக்க சம்மதம் சொன்னார். ஆனால், ஷூட்டிங் துவங்கவில்லை. தற்போது படக்குழு அவரை அணுகியபோது நீங்கள் சொன்ன தேதிகளை வேறுபடங்களுக்கு கொடுத்துவிட்டேன்.. என்னால் நடிக்க முடியாது.. 2 நாட்கள் டைம் கொடுங்கள் சொல்லுகிறேன்’ என சொல்லிவிட்டாராம். ஒருவேளை ஸ்ரீலீலா நடிக்கமுடியாது என சொல்லிவிட்டால் வேறு நடிகை நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

