வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.
கஜினி படத்திற்கு பின் மீண்டும் விண்டேச் லுக்கில் சூர்யா இந்த படத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதோடு வன்முறை காட்சிகள் எதுவுமில்லாமல் ஒரு ஃபீல்குட் திரைப்படமாக விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உருவாகியிருந்தது.
இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா ஆகியோரின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. கடந்த 14ம் தேதி வெளியான இந்த திரைப்படம் 15 நாட்களில் உலகமெங்கும் 200 கோடி வசூல் செய்து விட்டதாக தற்போது படக்குழு அறிவித்திருக்கிறது. படம் வெளியான 4 நாட்களிலேயே இந்த திரைப்படம் உலக அளவில் 150 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

