விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ‘சூப்பர் சிங்கர்’, ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘ஸ்டார்ட் மியூசிக்’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டி.ஜே. பிளாக். இவரது உண்மையான பெயர் சுதன் குமார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்கள் மற்றும் நடுவர்கள் பேசுவதற்கு ஏற்ப சரியான நேரத்தில் ‘டைமிங் பஞ்ச்’ மியூசிக் போட்டு ரசிகர்களைக் கவருவது இவருடைய தனிச்சிறப்பாகும். சின்னத்திரையை தாண்டி முன்னணி இசையமைப்பாளர்களின் இசை கச்சேரிகளிலும் இவர் டி.ஜே-வாக பணியாற்றி வருகிறார்.
தற்போது சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் டி.ஜே. பிளாக்கிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரம்யா என்பவருடன் வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி இவருக்குக் கோலாகலமாக திருமணம் நடைபெறவிருக்கிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்றென்றும் பற்றிக்கொள்ள… எனக்கு மிகவும் பிடித்தமான மனிதருடன் எனது வாழ்வின் மிகச்சிறந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். இன்னும் 10 நாட்களில்…” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இவருக்குச் சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
டிஜே பிளாக்கை திருமணம் செய்யவிருப்பவர் ரம்யா என்றும் இவர் ஒரு டாக்டர் என்றும் தெரிய வந்துள்ளது.

