இந்தியா

ஒரு வாரத்துக்குள் விஜய் 3 ஃபைலையும் ஓப்பன் பண்ணலனா!.. துரைமுருகன் பேட்டி..

சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ‘எனது டேபிளில் மூணு ஃபைல்கள் இருக்கிறது. அவற்றைத் திறக்கவைத்து விடாதீர்கள்.. தேவைப்படும் நேரத்தில் நான் பேசுவேன். இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என அவர் கூறினார்.

அதே சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. திமுக விசாவை பார்த்த கட்சி.. முதலமைச்சர் தைரியம் இருந்தால் அந்த மூன்று பைலையும் ஓபன் பண்ணட்டும். யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும். எங்களுக்கும் பயமே இல்லை. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன் ‘எப்போது பைலை ஓப்பன் பண்ண வேண்டும் என முதலமைச்சருக்கு தெரியும்.. விரைவில் உங்கள் ஆசையை அவர் நிறைவேற்றுவார்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் ‘தமது மேசையில் இருப்பதாக கூறிய மூன்று ஃபைல்களையும் முதலமைச்சர் விஜய் ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்.. இல்லையென்றால் சட்டமன்றத்தில் தவறான தகவலை கூறியதாக முதலமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானத்தை திமுக கொண்டுவரும்’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்