இந்தியா

விஜய் Sorry கேட்டதை ஸ்டாலின் வெளியே சொன்னது சரியா?!..

சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் மிசா காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கைதி செய்தது பற்றி பேசியிருந்தார். அப்போது அவர் காட்டிய உடல்மொழி சர்ச்சையை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தலைவர்கள் அதை கண்டித்தனர். திருமாவளவன் கூட விஜய்க்கு அறிவுரை கூறியிருந்தார்..

எனவே, யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடும், உள்நோக்கத்தோடு அப்படி செய்யவில்லை என ஜோசப் விஜய் விளக்கமளித்தார். ஒருபக்கம் இது தொடர்பாக வீடியோவை வெளியிட்ட முக ஸ்டாலின் ‘நீங்கள் முதல்வரான பின் என் வீட்டுக்கு வந்த போது உங்கள் கரங்களைப் பிடித்து வரவேற்றேன்.. அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை மிகவும் அதிகமாக விமர்சித்து விட்டேன்.. I am Sorry சார் என்று சொன்னீர்கள்.. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. இப்போது நீங்கள் நாட்டின் முதல்வர்.. யாரை பேசும் போதும் கண்ணியத்தோடு பேசுங்கள்’ என்று உங்களுக்கு சொன்னேன். நீங்கள் அதை மறந்து விட்டீர்களா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்..

இன்று காலை முதலே இந்த விவகாரம்தான் சமூகவலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது., பலரும் விஜய் தனிப்பட்ட முறையில் ஸ்டாலினிடம் சொன்னதை ஸ்டாலின் இப்படி வெளியே சொல்லியிருக்கக் கூடாது என சொல்கிறார்கள். சிலரோ விஜய் பேசியது சரியில்லை.. அதனால் மு.க ஸ்டாலின் சொன்னதும் சரியில்லை’ என்கிறார்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்