சினிமா

இசைஞானி இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பிரபல இசை நிறுவனமான சரிகம தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரிகம நிறுவனத்திடம் காப்புரிமை உள்ள திரைப்பட பாடல்களுக்கு இளையராஜா தொடர்ந்து உரிமை கோருவதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறி அவற்றை வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான பல திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகளை தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து வாங்கியுள்ளதாக சரிகம நிறுவனம் தனது மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே இளையராஜாவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், அந்த உத்தரவை அவர் மீறியுள்ளதாக தெரிகிறது.

இதனால் தடையை மீறும் இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க வேண்டும் என்றும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரிகம நிறுவனம் தீவிரமாக வாதிட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா தரப்பு உரிய பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ் இசை உலகில் தனது அலாதியான இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள இளையராஜாவுக்கு எதிராக எழுந்துள்ள இந்த காப்புரிமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்