சினிமா

சூர்யாவின் 47வது படம் ‘சீன்’!.. வெளியான வீடியோ!.. தீபாவளிக்கு ரிலீஸ்!…

சூர்யாவின் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்துவிட்ட நிலையில் தற்போது அவரின் 47வது படம் தொடர்பான அப்டேட் வெளியாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தை மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே பகத் பாசிலை வைத்து ஆவேசம் என்கிற படத்தை இயக்கி கவனம் பெற்றவர்.

இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் டி.எஸ்.பி-யாக சூர்யா நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு சீன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒரு டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. பல வருடங்கள் கழித்து ஒரு ஜாலியான போலீஸ் அதிகாரியாக சூர்யா இந்த படத்தில் நடித்திருக்கிறார். சீன் திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்