இந்தியா

கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி!.. முக ஸ்டாலின் உருக்கம்!…

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதோடு அந்த தொகுதிகளுக்கு அவர் பல வசதிகளும் செய்து கொடுத்ததாக சொல்லப்பட்டது

.

எனவே, கண்டிப்பாக தனக்கு வெற்றி உறுதி என்கிற நம்பிக்கையில்தான் முக ஸ்டாலின் அந்த தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் விஜயின் அலை காரணமாக கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இதன் காரணமாக கடந்த பல வருடங்களாக சட்டசபைக்கு வந்து கொண்டிருந்த ஸ்டாலினால் இந்தமுறை சட்டசபைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் சட்டசபையில் அப்பாவை காணோம் என முதல்வர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் நக்கலடிக்கிறார்கள். மேலும், விஜய் தனது மேனரிசம் மற்றும் ஆக்சன் மூலம் ஸ்டாலினை நக்கலடிக்கிறார்.

இந்நிலையில்தான், இன்று சென்னை அறிவாலயத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘நூறு வருட பாரம்பரிய சிறப்பு கொண்ட தலைமை அலுவலகம் ரீல்ஸ் வெறிபிடித்த ஆளும் கட்சியின் நடவடிக்கைகளால் தனது மாண்பை இழந்து விட்டது.. நடந்து முடிந்த கூட்டத்தொடரை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.. நல்ல வேளையாக நான் உள்ளே செல்லவில்லை.. கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றி… சட்டமன்றத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி’ என பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்