சினிமா

‘மொத ராத்திரி’ படத்தை இன்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.. ஆனால் ஒரு வருடத்திற்கு முன் என்ன நடந்தது தெரியுமா? இயக்குனர்

‘மொத ராத்திரி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ள நடிகர் ரிஷிகாந்த்தின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு, அப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி வெளியிட்டுள்ள எமோஷனலான வாழ்த்துப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக நெட்டிசன்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வரும் ரிஷிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி தனது பதிவில், சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் பணமில்லாதபோதும், சம்பளம் மற்றும் பயணச் செலவு கூட வாங்காமல் தனது ஸ்கூட்டியிலேயே வந்து நடித்துத் தந்த ரிஷிகாந்த்தின் உழைப்பை நினைவுகூர்ந்துள்ளார்.

பல தோல்விகள், தனிப்பட்ட இழப்புகள் மற்றும் சண்டைகளைக் கடந்து அவர்கள் இருவரும் இன்று வெற்றியை எட்டியுள்ளதாகவும், ஒரு வருடத்திற்கு முன்பு தேநீர் கடையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த நிலை மாறி, இன்று ரிஷிகாந்த் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்