சினிமா

எப்படி வேணா ட்ரோல் பண்ணுங்க!.. ஹேட்டர்ஸ்க்கு அட்லி பதிலடி!…

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டின் பெரிய இயக்குனராக மாறியவர் அட்லி. தமிழில் ஏற்கனவே வெளியான ஹிட் படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி பட்டி டிங்கரிங் செய்து படமாக எடுக்கிறார் என்கிற விமர்சனம் இவர் மீது உண்டு. ஆனால், அதற்கெல்லாம் அட்லி எந்த விளக்கமும் கொடுப்பதில்லை. ஒரு படத்தின் பாதிப்பு இல்லாமல் படமெடுக்க முடியாது என ஒருமுறை கூறினார்.

அதேபோல், சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் அனில் அம்பானியின் இல்ல நிகழ்ச்சிக்கு மனைவி பிரியாவுடன் சென்றிருந்தபோது அம்பானி என்கிற வார்த்தை அச்சிடப்பட்டிருந்த ஜாக்கெட்டை பிரியா அணிந்திருந்தார். இதுவும் ட்ரோலில் சிக்கியது.

இந்நிலையில், இன்று பத்தா பட வெற்றி விழாவில் இதுபற்றி பேசிய அட்லி ‘ என் நிறம் கருப்பு. அதனால்தான் ட்ரோல் செய்கிறார்கள். அம்பானியின் மகன் என் நெருங்கிய நண்பன், மும்பையில் நான் கஷ்டப்பட்ட போது எனக்கு பல உதவிகளை செய்தவன். என்ன ட்ரோல் செய்பவர்களுக்கு என் படத்தில் மூலம் மட்டுமே பதிலடி கொடுத்து வருகிறேன்’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்