இந்தியா

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு… கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம்…

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணய கொள்கை குழு, தனது கொள்கை நிலப்பாட்டை ‘நியூட்ரல்’ நிலையிலிருந்து ‘காலிபிரேட்டட் டைட்னிங்’ நிலைக்கு மாற்றியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருக்கும் அதே வேளையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் அவசியம் எனக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7.1 சதவீதமாகவும், சிபிஐ பணவீக்க கணிப்பை 5.2 சதவீதமாகவும் ஆர்பிஐ நிர்ணயித்துள்ளது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடன் வாங்கியவர்களுக்கான மாதத் தவணை மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் சற்றே உயரக்கூடும்.

இருப்பினும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 11 மாத இறக்குமதிக்கு போதுமானதாக பலமாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்