சினிமா

நீங்கதானே எங்களுக்கு ரெட் கார்டு வாங்கிக் கொடுத்தது?- முத்துக்குமரனை சீண்டிய VJ பார்வதி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவருடன் நெருக்கமாகப் பழகியதாகக் கூறும் வஹிதா என்ற பெண், முத்துக்குமரன் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி நெருக்கமாகப் பழகிவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டார்.

வஹிதா தனது வீடியோவில், தான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என்பதும், தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வருவதும் முத்துக்குமரனுக்கு தெரியும் எனக் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக மனதளவில் கஷ்டப்பட்டு வந்தபோது முத்துக்குமரன் தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும், பின்னர் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். திருமணம் செய்து கொள்வதாக முத்துக்குமரன் கூறியதை நம்பியே அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், பின் திருமணம் செய்துகொள் என்ர பேச்சு எழுந்ததும் அவர் தன்னை தவிர்க்கத் தொடங்கியதாகவும் வஹிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறிய வஹிதா, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டபோது தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தான் நலமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முத்துக்குமரன் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளை முத்துக்குமரன் மறுத்துள்ளார். தானும் வஹிதாவும் நண்பர்கள் மட்டுமே என்றும், அவரை காதலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தாங்கள் இயல்பாகப் பேசிய வீடியோக்கள் மற்றும் உரையாடல்கள் எடிட் செய்யப்பட்டு வேறு விதமான பிம்பத்தை உருவாக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கோரியுள்ளார்.

இந்த சர்ச்சை இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான VJ பார்வதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முத்துக்குமரனை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்