இந்தியா

வங்கக்கடல், அரபிக்கடல்.. ஒரே நேரத்தில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கொட்ட போகுது கனமழை…

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் உருவாகவுள்ள இந்த மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக, தமிழகத்தையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலிலும், கேரளத்தையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலிலும் புதிய புயல் சின்னங்கள் உருவாகக்கூடும்.

இந்த இரண்டு வானிலை அமைப்புகளின் தாக்கத்தால், தென்மேற்கு அரபிக் கடலில் இருந்து கேரளம் மற்றும் தமிழகம் வழியாக தென்கிழக்கு வங்கக் கடல் வரை வளிமண்டலத் தாழ்வுப் பாதை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு வாரங்களுக்கு பரவலாக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த இரட்டை புயல் சின்னம் உருவாக்கம் தமிழகத்தில் கூடுதல் மழையைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்