இந்தியா

போராட்டத்திற்கு வீட்டில் இருந்து கிளம்பிய மறுநிமிடம் அபிஜித் கரப்பான்பூச்சி கைது..டெல்லி போலீஸ் அதிரடி..

டெல்லியில் தேசிய கொடி பேரணியில் பங்கேற்க முயன்ற ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைவர் அபிஜீத் தீப்கேவை தில்லி காவல்துறையினர் அவரது வீட்டு வாசலிலேயே அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. முன்னதாக, ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி சிஜேபி நிர்வாகிகளான அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைக் கண்டிக்கும் வகையிலும், கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கன்னாட் பிளேஸில் மூவர்ணக் கொடியுடன் வெள்ளிக்கிழன்று போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜீத் தீப்கே பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதனையடுத்து, அவருக்குப் போராட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை என்று கூறி தில்லி காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும், காவல்துறையின் தடையை மீறிப் பேரணியில் கலந்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறிய அபிஜீத் தீப்கேவை பெண் காவலர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்துக் கைது செய்தனர். தொடர்ந்து தில்லியில் நிலவி வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்