இந்தியா

மது பிரியர்களுக்கு ஷாக்!.. பெங்களூரில் மதுவுக்கு தடை!

தமிழ்நாட்டில் மட்டுமே அரசே மதுபானக்கடைகளை நடத்துகிறது. எனவே, குறிப்பிட்ட மதுபான ஆலைகளிலிருந்து மட்டுமே மதுபான பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், மதுபான பிரியர்கள் விரும்பும் பல வகையான மதுபானங்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. எனவேதான், அருகில் உள்ள பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று விதவிதமான மதுபானங்களை சுவைக்கிறார்கள்.

இதில், கேரளாவிலிருந்தே பலரும் பெங்களூருக்கு செல்கிறார்கள். ஏனெனில், அங்கு விதவிதமான மதுபானங்கள் கிடைக்கிறது. அதேபோல், இரவு நேரங்களில் செயல்படும் நிறைய பப்கள் அங்கே இருக்கிறது. குறிப்பாக எம்.ஜி.ரோட்டில் ஏகப்பட்ட பப்கள் இருக்கிறது. அதுபோக நிறைய பார்கள் அங்கு செயல்படுகிறது. அதற்கென்றே சுற்றுலா பயணிகள் பலரும் செல்வதுண்டு.

இந்நிலையில், பெங்களூரில் நாளை முதல் அக்டோபர் 27ம் தேதி வரை மதுபான விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. தசரா மற்றும் எம்.எல்.சி தேர்தல்களை முன்னிட்டு 7 நாட்கள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்