விளையாட்டு

78 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.. 400 ரன்கள் அடித்த 23 வயது இளம் வீரர்…

நாகலாந்தின் சோவிமா மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், மிசோரம் அணியை சேர்ந்த இளம் வீரர் சின்மய் சுதார் 400 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மிசோரம் மற்றும் நாகலாந்து அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் அபாரமாக விளையாடிய சின்மய் சுதார், 517 பந்துகளில் 45 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உள்பட 400 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் மிசோரம் அணி தனது முதல் ஒம்மொங்ஸில் 581 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

இதற்கு முன்பு, கடந்த 1948-49 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த பி.பி.பிம்பல்கர் கதியவார் அணிக்கு எதிராக 443 ரன்கள் எடுத்ததே முதல்தர கிரிக்கெட்டில் இந்திய வீரரின் நீண்டகால சாதனையாக இருந்தது.

கடந்த 78 ஆண்டுகளாக எந்தவொரு வீரரால் முறியடிக்க முடியாத இந்த சாதனையை தற்போது சின்மய் சுதார் சமன் செய்துள்ளார். மேலும், முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் உலகளவில் 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் இவர் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சின்மய் சுதாரின் தந்தை ராஜேஷ் சுதார் ஒரு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் இந்திய அணியின் புகழ்பெற்ற வீரர் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து மும்பை அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிலும் சின்மய் சுதார் இடம்பெற்று விளையாடியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்