இந்தியா

பழிவாங்கும் நடவடிக்கை!.. நாம் தமிழர் கட்சி கார்த்திகா கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!..

தாராபுரம் இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட கார்த்திகா இன்று காலை தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தழிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கார்த்திகா முதலமைச்சர் ஜோசப் விஜய் தாராபுரத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்றபோது அவர் செல்லும் வழியில் போராட்டம் நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இன்று காலை கோவையில் கார்த்திகா, அவரின் கணவர் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது..

இதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இடைத்தேர்தலில் தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதை நாடே பார்த்தது. அதைக் தட்டிக்கேட்ட நாதக நிர்வாகிகளை கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மை, குறுகிய மனப்பான்மை, சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக தவெக அரசு நடந்து கொள்கிறது.

தவெகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு காவல்துறை துணை போகக்கூடாது. ஜாமீனில் வெளிவரத்தக்க வழக்குகளுக்காக கைது செய்யும் போலீசார் நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாவார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்