சினிமா

சூர்யாவின் மடியில் உயிர் பிரிய வேண்டும்!.. ஜோதிகா கண்ணீர்!…

சூர்யாவும், ஜோதிகாவும் சினிமாவில் வளர துவங்கிய போது ஒன்றாக பல திரைப்படங்களிலும் இணைந்து நடித்தனர். இருவருக்கும் இடையே நட்பாகி அதன்பின் அது காதலாக மாறியது. சூர்யாவின் அப்பா சிவக்குமாரின் சம்மதத்திற்காக சில வருடங்கள் காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்தும் வருகிறார்கள்.

திருமணமாகி 20 வருடங்கள் ஆனதையொட்டி சில நாட்களுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் மீண்டும் திருமணமும் செய்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் சூர்யாவும், ஜோதிகாவும் ஏற்கனவே வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய வீடியோவை இருவரும் வெளியிட்டுள்ளனர். அதில், தேவாலயத்தில் திருமணத்திற்கு சூர்யா ஜோதிகாவை பற்றியும், ஜோதிகா சூர்யாவை பற்றியும் நெகிழ்ந்து பேசும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

அதில் பேசும் ஜோதிகா ‘சூர்யாவின் மடியில் என் உயிர் பிரிய வேண்டும்.. அவர் என்னை விட்டுப் பிரிந்தால் நானும் அவரைத் தேடி வந்துவிடுவேன்.. சூர்யா இல்லாமல் எப்படித் தூங்குவேன் என தெரியவில்லை. அவர் முதலில் இறந்துவிட்டால் சொர்க்கத்திலும் அனைவரையும் அவர் தனது பேச்சால் சலிப்படையச் செய்துவிடுவார் என்பதால் தானும் அங்கு அவரைப் பின் தொடர்ந்து சென்றுவிடுவேன்’ என நெகிழ்ச்சியுடன் கண்ணீரோடு கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்