சினிமா

ஜெயிலர் 2 படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்… நண்பர்களுடன் கொண்டாட்டம்…

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான சஞ்சு சாம்சன், நடிகர் ரஜினிகாந்தின் மீதுள்ள தனது அசாத்தியமான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை பார்க்கத் தனது மனைவி மற்றும் நண்பர்களுக்காக ஒரு திரையரங்கம் முழுவதையும் முன்பதிவு செய்து அசத்தியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், அவரது திரைப்படங்களை எப்போதும் திரையரங்கில் கண்டு ரசிப்பதை வழக்கமாக கொண்டவர்.

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு காரணமாக படம் வெளியான முதல் நாளன்றே பார்க்க முடியாமல் போனதாக தெரிவித்த சஞ்சு சாம்சன், அடுத்த நாளே திரையரங்கம் முழுவதையும் முன்பதிவு செய்து அந்த வாய்ப்பை ஈடுசெய்துள்ளார். “ரஜினி சாரின் படங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். டெல்லி பயணத்தால் முதல் நாள் பார்க்க முடியவில்லை, ஆனால் இன்று அதிர்ஷ்டவசமாக திரையரங்கம் முழுவதையும் முன்பதிவு செய்து என் மனைவி, நண்பர்களுடன் பார்க்க வந்துள்ளேன்” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

மேலும், இந்திய அணியின் ஊழியர்களில் தமிழ் தெரிந்த அனைவரையும் இந்த சிறப்பு திரையிடலுக்கு அழைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தலைமுறை கடந்து திரையுலகில் சாதனை படைத்து வரும் ரஜினிகாந்தின் மீது சஞ்சு சாம்சன் காட்டியுள்ள இந்த அன்பு, ரஜினி ரசிகர்களிடையேயும் விளையாட்டுப் பிரியர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்